ஆங்கிலக் கால்வாயில் படகு விபத்து: பிரான்ஸ் அரசாங்கத்திடம் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல்

OruvanOruvan

French state for damages

2021 ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி 27 பேர் உயிரிழந்த சம்பவத்தை அத்தனை இலகுவில் எவரும் மறந்துவிட முடியாது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் தமது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளடங்குவதாக தெரிவித்து எத்தியோப்பியாவைச் சேர்ந்த நபரொருவர் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்கான பிரச்சாரக் குழு இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆபிரிக்க நாடுகளில் இருந்து புலம்பெயர்வோருக்கு ஆங்கிலக் கால்வாய் முக்கிய வழியாக மாறியதில் இருந்து, பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள குடும்பங்கள் இந்த வழக்கில் இணைந்துகொள்வார்கள் எனவும் குறித்த குழு நம்பிக்கை கொண்டுள்ளது.

இதனிடையே, கப்பல் விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் உதவிகோரி சுமார் 15 தடவைகள் தொலைபேசி ஊடாக அழைத்த போதும் பதிலளிக்கத் தவறியதாக பிரான்ஸ் அதிகாரிகள் மீதி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஆபத்தில் உள்ள நபர்களுக்கு உதவாத தவறியமைக்காக ஏழு இராணுவ வீரர்கள் மீதும் கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.