உக்ரெய்ன் மீது ஏவுகணை தாக்குதல்: 20 பேர் பலி-பலர் படுகாயம்

OruvanOruvan

Odesa

உக்ரெய்னின் கருங்கடல் நகரான ஒடிசா பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக உக்ரெய்ன் தெரிவித்துள்ளது. தாக்குதல் காரணமாக 70 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது ரஷ்யாவின் அதிபயங்கர தாக்குதல் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ரஷ்யாவிற்கு தக்கபதிலடி கொடுக்கப்படும் என உக்ரெய்ன் ஜனாதிபதி செலன்ஸ்கி(Volodymyr Zelenskiy) தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்தில் ஒவ்வொரு தினமும் இத்தகைய தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுவருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.