டைட்டானிக் சிதைவுகளை தேடி மீண்டும் பயணம்: உரிய வழிமுறைகள் பின்பற்றப்படும்

OruvanOruvan

Titanic ship


கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைத் தேடி கண்டுபிடிக்கும் வகையில் திட்டமிட்ட பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் டைட்டானிக் சிதைவுகளைத் தேடிச் சென்ற 'டைட்டன்' என்ற நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து விபத்துக்குள்ளாகியிருந்தது. விபத்தினால் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த ஐந்து பேர் உயிரிழந்திருந்தனர்.

டைட்டானிக் சிதைவுகளை நோக்கி பயணத்தினை மேற்கொண்டிருந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் சிதைவுகளை அடைவதற்கு ஐந்து மணி நேரத்திற்கு முன்னதாக வெடித்து சிதறியது.

அந்த வகையில் எதிர்வரும் காலங்களில் சிதைவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதாயின் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டவிதிகளின் பிரகாரம் செயற்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதேவேளை ஆய்வு பயணத்தை எதிர்வரும் மே மாதம் தொடங்கவுள்ளது. இதனை உதவி சட்டமா அதிபர் கென்ட் போர்டர்(Kent Porter)வெர்ஜினியா உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.