பிலிபைன்ஸின் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவுடன் பேச்சு: சீனாவின் அச்சுறுத்தலைத் தவிர்க்க முயற்சி

OruvanOruvan

Marcos

பிலிபைன்ஸ் ஜனாதிபதி ப்பேர்டின்ட் மார்கோஸ் (Ferdinand Marcos) அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிலிங்கடனை (Antony Blinken) எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்திப்பில் இருதரப்பு பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் உரையாடப்படவுள்ளது.இது தொடர்பில் பிலிபைன்ஸ் அரசாங்கம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

தென்சீன கடலில் பிலிபைன்ஸிற்கும் சீனாவிற்கும் இடையில் முறுகல் நிலை அதிகரித்துவரும் நிலையில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

கடலில் பாதுகாப்பு நடவடிக்கையினை இராணுவத்தரப்பு கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில்,மார்கோஸ் இதனை வெளியிட்டுள்ளார்.