ரிஷி சுனக் மீது பழமைவாதக் கட்சியினர் அதிருப்தி: பதவியிலிருந்து நீக்குவது குறித்து பலமுறை ஆலோசனை

OruvanOruvan

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பதவியில் மாற்ற மேற்கொள்ள அவசியம் இல்லை என பழமைவாதக் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

ரிஷி சுனக் 16 மாதங்களுக்கு முன்னர் பிரதமராகப் பதவி ஏற்றது முதல் அக்கட்சியினர் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

தனித்தனியாகக் கூடி ஆலோசனை நடத்தினர்

என்றாலும், அண்மையில் அவரை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பழமைவாதக் கட்சியினர் சில கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.

ஆயினும், தலைமைத்துவ மாற்றம் அரசியல் பாதிப்பை உருவாக்கக்கூடும் என்று கட்சியினர் ஆலோசித்ததன் பிரகாரம் தற்போதைக்கு எவ்வித மாற்றங்களும் அவசியம் இல்லையென தீர்மானித்துள்ளனர்.

அண்மையக் காலமாக அமைச்சரவை அமைச்சர்கள் தனித்தனியாகக் கூடி ஆலோசனை நடத்தினர்.

அரசியல் முடிவுகளை சுனக்கால் எடுக்க முடியவில்லை

2025ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் சுனக் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவாரா என்ற சந்தேகத்தை அது உருவாக்கியது.

எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் எழுச்சியைத் தடுத்து நிறுத்தத் தற்காலிகப் பிரதமர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்தது.

ஆளும் கட்சிக்குச் சாதகமான அரசியல் முடிவுகளை சுனக்கால் விரைந்து எடுக்க முடியவில்லை என்பதை உணர்த்தும் சில சம்பவங்களின் தொடர்ச்சியே அத்தகைய பேச்சுகளுக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

வரி குறைப்பு தொடர்பான புதிய வாக்குறுதிகளை வெளியிடாதது, ஆளும் கட்சி நன்கொடையாளரின் இனவாதக் கருத்து தொடர்பான பூசலுக்கு முடிவு காணாதது போன்றவை அதனுள் அடங்கும்.

என்றாலும் சுனக்கை மாற்றும் நடவடிக்கையை பழமைவாதக் கட்சியினர் தற்போது கைவிட்டுள்ளனர்.