வளர்ச்சியடையும் பிரித்தானிய பொருளாதாரம்: தேர்தல் வெற்றியை நோக்கி பிரதமர் ரிஷி

OruvanOruvan

UK economy

பிரித்தானியாவின் பொருளாதாரம் கடந்த ஜனவரியிலிருந்து வளர்ச்சியடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 2023 ஆம் ஆண்டு பொருளாதாரம் மந்தநிலையை அடைந்திருந்தது.

தேர்தலுக்கு முன்னர் பிரதமர் ரிஷி சுனக் மக்களுக்கு நிவாரணம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு உற்பத்தியானது மாதாந்தம் 0.2 வீதத்தினால் வளர்ச்சியடைந்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் பொருளாதாரமானது 0.1 வீதத்தினால் வீழ்ச்சியடைந்து இருந்த நிலையில் புதிய வளர்ச்சியானது ஏற்பட்டுள்ளதாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் ரிஷி தரப்பினருக்கு பொருளாதார வளர்ச்சியானது தேர்தலில் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பப்படுகின்றது.

இதேவேளை பிரித்தானியாவின் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை பிரதமர் ரிஷி விரிவாக்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.