ஸ்லோவாகியாவில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: உக்ரெயினுக்கு ஆதரவாக கோசங்கள்

OruvanOruvan

உக்ரெய்ன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்லோவாகியாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் அரசாங்கம், ரஷ்யாவுடன் காட்டிவரும் நெருக்கத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர்.

பிரதமர் றொபேர்ட் பிகோ(Robert Fico) ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஐரோப்பிய நாடுகள் உக்ரையினுக்கு இராணுவ உதவிகளை வழங்குவது குறித்து விமர்சித்துவருகின்றார்.இந்த நிலையில் மக்கள் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக தமது விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டிருந்தனர்.