இஸ்ரேல் படையின் தாக்குதலில் இருவர் பலி: நோன்பு காலத்தில் தொடரும் அவலம்

OruvanOruvan

Palestinians

இஸ்ரேல் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரைப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனை பலஸ்தீனிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.இதேவேளை வெவ்வேறு சம்பங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனின் நகரத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் முன்னால் இருந்தவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பலஸ்தீனிய முஸ்லிம்கள் நோன்பு அனுஷ்டித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.