புலம்பெயர்வோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியில் பிரித்தானியா: அதிகரிக்கும் தாக்கம்

OruvanOruvan

British

பிரித்தானிய அரசு சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆரம்பத்தில் பிரித்தானிய அரசானது சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.

புலம்பெயர்தல் அமைப்பை தவறாக பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு வர முயற்சி செய்வோரைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 11ஆம் திகதியிலிருந்து முதியவர்கள் , நோயாளிகளை கவனித்துக் கொள்பவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதற்கான தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவில் காணப்படக்கூடிய புலம்பெயர்ந்தவர்கள் ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது பொருத்தமான துறைகளில் முதலீடு செய்து நீண்ட கால முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே , பிரித்தானிய அரசு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை, ஐக்கிய இராச்சியம் மாணவர் விசாக்கள் உட்பட விசா விதிகளில் பாரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியது.