வைத்தியர்களுக்கு உதவ புதிய முறைப்பாட்டு இலக்கம்: தென்கொரிய அரசாங்கம் அறிவிப்பு

OruvanOruvan

South Korea

வைத்தியர்களுக்கு உதவும் வகையில் தென்கொரிய சுகாதார அமைச்சு புதிய தொலைபேசி இலக்கத்தை வெளியிட்டுள்ளது.

சுகதார அமைச்சர் சோ கூ கொங் (Cho Kyoo-hong) புதிய சுகாதார சீர்திருத்தச் சட்டத்தினை ஆதரித்திருந்த நிலையில் பயி்ற்சி வைத்தியர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் போராட்டம் காரணமாக ஏற்படும் வெளி தொந்தரவுகளுக்கு வைத்தியர்களுக்கு உதவும் வகையில் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் புதிய மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுமார் 12000 பயிற்சி வைத்தியர்கள் பதவி விலகியிருந்தனர்.