அரபிக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 12 மீனவ சடலங்கள் மீட்பு: உலகின் முக்கிய செய்திகளின் தொகுப்பு...

OruvanOruvan

Short Story - world

அரபிக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 12 மீனவ சடலங்கள் மீட்பு

அரபிக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 12 பாகிஸ்தான் மீனவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 5ஆம் திகதி மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் காணாமற்போனோரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு

பப்புவா நியூ கினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 6.0 பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

30 வருடங்களின் பின்னர் நட்டமடைந்த அடிடாஸ்

ஜெர்மன் விளையாட்டு ஆடைகள் மற்றும் பொருட்கள் விற்பனை நிறுவனமான அடிடாஸ் (adidas) 30 ஆண்டுகளின் பின்னர் முதல்முறையாக நட்டமீட்டியுள்ளது. அமெரிக்காவில் உள்ள விளையாட்டு ஆடை விற்பனையாளர்கள் பிறநாட்டு ஆடைகளை எதிர்த்துப் போராடுவதால் விற்பனையில் ஏற்பட்டுவரும் சரிவே இவ்வாறு நட்டமடைய காரணம்.

பாதுகாப்பு செலவீனங்களை உயர்த்திய டென்மார்க்

டென்மார்க் தனது சொந்த பாதுகாப்புக்கான செலவினங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 40.5 பில்லியன் டேனிஷ் க்ரவுன்களாக ($5.9 பில்லியன்) அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

OruvanOruvan

சம்பளத்தை கைவிடும் பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி

பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அலி சர்தாரி (Asif Ali Zardari), நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை மேற்கோள் காட்டி, பதவியில் இருக்கும் போது தனது சம்பளத்தை கைவிடுவதற்கான தனது முடிவை செவ்வாயன்று அறிவித்ததாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.

OruvanOruvan

Pak President Asif Ali Zardari To Forgo Salary Amid Economic Crisis: Report

விமானத்தில் மயங்கிய சிறுவன் - விரைந்து முதலுதவி செய்த விமான ஊழியர்கள்

குவாங்சி பெய்பு வளைகுடா ஏர்லைன்ஸ் விமானத்தில் 7 வயது சிறுவன் மயங்கி விழுந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதன்போது விமான ஊழியர்கள் நொடி கூட வீணடிக்காமல் சிறுவனுக்கு அவசர சிகிச்சை அளித்த மருத்துவ உதவியால் சிறுவன் பூரண குணமந்ததாகவும் கூறப்படுகின்றது. தற்போது விமான ஊழியர்களுக்கு அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சோமாலியா கடற்பகுதியில் பயணித்த சரக்கு கப்பலை கைப்பற்றிய கடற்கொள்ளையர்கள்

சோமாலிய கடற்பகுதியில் பங்களாதேஷ் கொடியுடன் பயணித்த சரக்கு கப்பலொன்று கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், குறித்த கப்பலில் பயணித்த பணியாளர்கள் 23 பேரும் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாகன ஏற்றுமதியில் வளர்ச்சிகாணும் சீனா

சீனாவின் வாகன ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2024 ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் 822,000 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது கடந்த 2023 ஆம் ஆண்டை விட 30.5 வீதம் அதிகமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.