கேட் மிடில்டனின் பொய்யான புகைப்படத்தை வெளியிட்டதால் சர்ச்சை: மீண்டும் மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகும் அரச குடும்பம்

OruvanOruvan

கேட் மிடில்டனின் புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை

வேல்ஸ் இளவரசியை காணவில்லை என்ற வதந்திகள் சற்றே அடங்கியிருந்த நிலையில், அவர் நலமாக இருப்பதாக அரச குடும்பம் ஒரு அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருந்தது.

உலகமே தொடர்ந்து அவதானித்து வரும் நிலையில், அரச குடும்பம் சில விடயங்களில் செய்துவிடும் அசமந்தபோக்குகள் அனைவரின் விமர்சனத்துக்கு உள்ளாகின்றது.

SouthEYE-PC10SouthEYE-PC10

SouthEYE-PC10

கேட்டுக்கு என்ன நடந்தது?

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி கேட் மிடில்டன் திரிரென காணாமல் பொய்விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியது.

இளவரசி பிரசவத்தின் பின் ஏற்பட்ட வயிற்றுக் கோளாறு காரணமாக சத்திரசிகிச்சை ஒன்றை செய்துள்ளார். ஜனவரி மாதம் முதல் இளவரசி கேத் மிடில்டன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதையடுத்து மத்திய லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்று கென்சிங்டன் அரண்மனை ஒரு சில வாரங்கள் முன் செய்தி வெளியிட்டது.

கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட செய்தியில், இளவரசிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் ஈஸ்டர் பண்டிகை வரை (மார்ச் 31 வரை) அரச கடமைகளை செய்ய மாட்டார்.

அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் அரச கடமைகளை செய்வதில் இருந்து விலகியுள்ளார் என்று சொல்லப்பட்டது.

புகைப்படத்தால் எழுந்த புதிய சர்ச்சை

Photo Credit: theverge.comPhoto Credit: theverge.com

Photo Credit: theverge.com

பிரிட்டன் அரச குடும்பம் சார்பாக கேட் நலமாக இருப்பதை நிரூபிப்பதற்காக அரச குடும்பம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

குறித்த புகைப்படமானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதுடன், சமூக வலைத்தளத்தில் பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த புகைப்படம் பொட்டோசொப் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏன் இப்படி பொய்யான கருத்துக்களை வெளியிடுகின்றீர்கள் எனவும் விமர்சிக்கப்படுகின்றது.

உண்மை வெளிவரவேண்டும்

பிரிட்டன் அரச குடும்பம் தொடர்பான உண்மைகள் தொடர்ந்து காலம் காலமாக மறைக்கப்படுவதன் பின்னணி என்ன, என்பது பற்றியும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், இளவரசி கேட் மிடில்டன் பற்றிய உண்மை தகவல் விரைவில் வெளியிடப்பட வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போட்டோசொப் செய்யப்பட்டதற்கான சான்றுகள் என காண்பிக்கப்படும் படங்கள் 👇