மத்தியதரைக் கடலில் துறைமுகம் அமைக்கும் அமெரிக்கா: காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க திட்டம்
யுத்த மோதல்களினால் பாதிப்படைந்துள்ள காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் வகையில் மத்தியதரைக் கடலில் புதிய தற்காலிக துறைமுகம் ஒன்று அமைக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேற்றைய இடம்பெற்ற அரச உரையாடலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சைப்பிரஸ் தீவுகளை அடிப்படையாகக் கொண்டு முதல்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை காசாவில் அமெரிக்க இராணுவத்தினரை நிறுத்துவது திட்டமில்லை எனவும் பைடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம், ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் உள்ள கோபத்தைத் தணிப்பதற்கு பைடன் முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.