காஸா போர் ஆறாவது மாதத்தை எட்டியுள்ளது: இஸ்ரேல் ஒத்துழைக்காததால் போர் நிறுத்த பேச்சு தோல்வி

OruvanOruvan

Gaza AFP

காஸா போர் ஆறாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், ரஃபா உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல்களை முடுக்கிவிடப் போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ அறிவித்துள்ளார்.

ரமழான் மாதம் ஆரம்பிக்கும் முன்னர் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான கெய்ரோ பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் ஒத்துழைக்காததால் தோல்வியடைந்தது. ஹமாஸ் குழு நேற்று நாடு திரும்பியது.

இதனிடையே, அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போருக்கு 5 மாதங்கள், 75 வீதமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் மற்றும் காஸாவில் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிதித் தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டாம்

சேதமடைந்த உள்கட்டமைப்புகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை இலவசமாக வழங்கும் ஐ.நா. முகவர் அமைப்புகளை இஸ்ரேலிய இராணுவம் தடுப்பதால் நிலைமை மோசமடைந்து வருகிறது.

மத்திய காசாவில் நேற்று இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 30 ஆயிரத்து 800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 72 ஆயிரத்து 198 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் சட்டவிரோதமாக குடியேறிய இஸ்ரேலியர்களுடன் நிதித் தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டாம் என நோர்வே நிறுவனங்களுக்கு நோர்வே அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

உணவுகள் விமானம் மூலம் விநியோகம்

மேற்குக் கரையில் இஸ்ரேலின் குடியேற்றம் சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என நோர்வே சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை பாலஸ்தீனத்தின் ஐநா உறுப்புரிமைக்கு ஆதரவளிக்குமாறு பாதுகாப்பு பேரவையின் ஏனைய உறுப்பினர்களை சீனா வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், பட்டினிச் சாவைத் தடுக்க உடனடியாக போர்நிறுத்தம் செய்ய உத்தரவிடுமாறு தென்னாப்பிரிக்கா ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவும், ஜோர்டானும் இணைந்து நேற்று காஸாவில் இலவச உணவுப் பொதிகளை விமானம் மூலம் விநியோகித்துள்ளன. உணவுப் பொதிகள் விநியோகிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.