கொங்கோவில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம்: சட்டத்தரணிகள் அச்சம் வெளியீடு

OruvanOruvan

Hong Kong

தேசிய பாதுகாப்பு குறித்தான புதிய சட்டவரையை கொங்கோ அரசாங்கம் இன்றைய தினம் வெளியிட்டுள்ளது. குறித்த ஆவணம் வெளிளிநாட்டு தூதுவர்களினால் கூர்ந்து ஆராயப்பட்டுவருகின்றது.

புதிய சட்டமூலம் வர்த்தகத்துறையின் சுயாதீனத்தினை பாதிக்கும் என்ற அச்சம் சட்டத்தரணிகள் மற்றும் வர்த்தகர்களிடம் எழுந்துள்ளது.

உளவுபாரை்த்தல், வெளிநாடுகளின் தலையீடு,அரச இரகசியங்களை வெளியிடுதல், மற்றும் தேசத்துரோகம் உள்ளிட்ட விடயங்கள் குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக குறித்த சட்டமூலம் பல்வேறுபட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.