தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் சீனா: அணுவாயுதம் குறித்தும் கூடுதல் கவனம்
தேசிய பாதுகாப்பு மற்றும் நவீனப்படுத்தல் குறித்தான சட்டங்கள் இயற்றப்படும் என சீனாவின் உயர்மட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் உறுதியளித்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பு குறித்தான நிபுணர்களின் ஆய்வுகளின் பிரகாரம் புதிய சட்டத்தினைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 170 உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் காங்கிரஸின் நிலையில் குழு வருடாந்த ஒன்றுகூடலை தலைநகர் பிஜிங்ஙில் கூடியிருந்த நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அவசர காலநிலை மற்றும் அணுசக்தி தொடர்பான சட்டங்களையும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒழுங்கில் யுத்த அச்சம் ஒன்று நிலவிவரும் நிலையில் நாடுகள் தமது தேசிய பாதுகாப்பினை பலப்படுத்திவருகின்றன.