உக்ரைனுக்கு ஆளில்லா விமானங்களை வழங்கும் பிரித்தானியா: கப்பல்களை குறிவைத்து தாக்க முடியும்

OruvanOruvan

Ukraine President Volodymyr Zelenskyy and UK Defense Secretary Grant Shapps Foxnews

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், தாக்குதல்களால் உக்ரைன் பலத்த சேதத்தை சந்தித்து வருகிறது.

உக்ரைனுக்கு பல நாடுகள் ஆயுதம் மற்றும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், உக்ரைனுக்கு பாரிய உதவிகளை வழங்கியுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு 10 ஆயிரம் ஆளில்லா விமானங்களை வழங்குவதாக பிரித்தானியா கூறியுள்ளது.

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிரான்ட் ஷாப்ஸ், உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

முன்னதாக, உக்ரைனுக்கு வழங்குவதற்காக 256 மில்லியன் டொலர் நிதியுதவிரைய பிரிட்டன் அறிவித்தது. மேலும், இந்த ஆளில்லா விமானங்களுக்காக மேலும் 160 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் பொதியில் ஆயிரம் கமிகேஸ் என்ற ஒரு வழி தாக்குதலுக்கான ஆளில்லா விமானங்கள் இருக்கும். இவற்றின் மூலம் கப்பல்களை குறிவைத்து தாக்க முடியும்.

பிரித்தானியா வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு கருங்கடலில் உள்ள ரஷ்ய கடற்படையை உக்ரைன் படைகள் திறம்பட தாக்கி வருவதாக கூறப்படுகிறது.

சில நாட்களாக ரஷ்ய கடற்படை மீது எதிர்பாராத தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

இரு தினங்களுக்கு முன்னர் கருங்கடலில் ரோந்து சென்ற ரஷ்ய போர்க்கப்பல் உக்ரைன் நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்டது.