மூன்று வருடங்களுக்குள் இருநூறுக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி: பக்கவிளைவுகள் கண்டறியப்படவில்லை - ஆய்வுகள் முன்னெடுப்பு
ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு (COVID-19) எதிராக 200 இற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவளில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் குறித்த நபர் 217 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதன் மூலம் அவருக்கு எந்தவொரு பக்கவிளைவும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் 29 மாதங்களுக்குள் தனிப்பட்ட ரீதியில் குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டமையானது மருத்துவ ஆலோசனைகளுக்கு எதிரானது எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து மருத்துவ இதழான The Lancet Infectious Diseases journal ஆவணப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து எர்லாங்கன்-நியூரம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு குறித்த நபர் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.
இதன்படி, குறித்த நபரிடம் இருந்து இரத்தம் மற்றும் உமிழ்நீரின் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மீண்டும் மீண்டும் செலுத்தப்படுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், உடலில் சில செல்கள் சோர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான ஒரு உத்தியாக ஹைப்பர் தடுப்பூசி பயன்படுத்துவதை அனுமதிக்கவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.