இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ரொய்ட்டர்ஸ் நிருபர் பலி: உலகின் முக்கியச் செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ரொய்ட்டர்ஸ் நிருபர் பலி
கடந்த ஒக்டோபர் மாதம் தெளிவாக அடையாளம் காணப்பட்ட ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேலின் டேங்க் குழுவினர் நடத்திய தாக்குதலில் லெபனானில் ராய்ட்டர்ஸ் நிருபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான அறிக்கை வியாழக்கிழமை (07) வெளியிடப்பட்டது.
பைடனுடன் கலந்துரையாடுவதற்கு தயார் - ட்ரம்ப்
நாட்டின் நலன் கருதியும் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள நெருக்கடிககைளை கருத்திற்கொண்டும் அமெரிக்க ஜனாதிபதி பைடனுடன்கலந்துரையாடுவது அவசியம் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் தான் எந்தவொரு நேரத்திலும் பைடனுடன் கலந்துரையாடுவதற்கு தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தாமதமான செனகல் ஜனாதிபதி தேர்தல் மார்ச் 24 அன்று
தாமதமான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் மார்ச் 24 அன்று நடத்தப்படும் என்று செனகல் அரசாங்கம் புதன்கிழமை (06) அறிவித்தது. பல வாரங்களாக அரசியல் கொந்தளிப்பு மற்றும் வன்முறை ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
சீனாவைப் பற்றி அமெரிக்கா தவறான கருத்து - அமைச்சர் வாங் யி
ஜனாதிபதிகளான ஜோ பைடன் மற்றும் ஜி ஜின்பிங் கடந்த ஆண்டு நவம்பரில் சந்தித்ததில் இருந்து சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், அமெரிக்கா சீனாவின் தவறான கருத்துக்களைப் தவறாக எண்ணிக் கொண்டுள்ளது மற்றும் அதன் "வாக்குறுதிகளை" இன்னும் நிறைவேற்றவில்லை என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.
திருத்தந்தை போப் பிரான்சிஸ்கு மீண்டும் உடல் நிலை பாதிப்பு
கடந்த புதனன்று கத்தோலிக்க திருத்தந்தையான போப் பிரான்சிஸ் சளி, மூச்சு குழாய் அழற்சி மற்றும் காய்ச்சலில் பாதிக்கப்பட்டடுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், போப் பிரான்சிஸ் வாராந்திர பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கினாலும் பிரசங்கம் செய்ய முடியாது தனது உதவியாளரை படிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் - மூன்று பணியாளர்கள் கொலை
தெற்கு ஏமனில் சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏடன் வளைகுடாவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பார்படாஸ் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸில் வியாபார சலுகைகள் முடக்கம்
பிரான்சில் பல்பொருள் அங்காடிகளில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு 34 வீதத்துக்கு மேல் தள்ளுபடி வழங்குவதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் எனும் சலுகை முறை குறித்த பொருட்களுக்குக் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வெளிநாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.