ஒரு மனிதனின் அதிகபட்ச ஆயுட்காலம்: நெதர்லாந்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு
நீண்ட ஆயுட்காலம் இதுவே ஒவ்வொரு மனிதனின் ஆசையாக இருந்து வருகிறது.இதன் காரணமாகவே மனித ஆயுளை அதிகரிப்பது தொடர்பான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ முடியும் என்பதை தமது ஆராய்ச்சியின் மூலம் அறிந்துகொண்டுள்ளனர்.
நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் நீண்ட ஆயுளுக்கு பின்னால் உள்ள இரகசியங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஊட்டச்சத்து, சிறந்த வாழ்க்கை நிலைமைகள் மற்றும் நவீன மருத்துவ பராமரிப்பு ஆகியவற்றால் ஆயுட்காலம் அதிகரிக்கிறது என நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தமது ஆராய்ச்சிக்காக, அவர்கள் வெவ்வேறு காலங்களில் இறந்த சுமார் 75 ஆயிரம் நெதர்லாந்து குடிமக்கள் பற்றிய தரவுகளை முதலில் சேகரித்தனர். இது முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இறக்கும் போது அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
பெண்களுக்கான அதிகபட்ச ஆயுட்காலம் 115.7 ஆண்டுகள் என ரோட்டர்டாமில் உள்ள டில்பர்க் மற்றும் எராஸ்மஸ் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் தமது ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர். மேலும் ஆண்களின் அதிகபட்ச ஆயுட்காலம் 114.1 ஆக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதன்படி பெண்களின் ஆயுட்காலம் ஆண்களை விட சற்றே அதிகம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது
மூன்று தசாப்த கால தரவுகளின் அடிப்படையில் அதிகபட்ச மனித ஆயுட்காலத்தை ஆராய்ச்சியாளர்களால் மதிப்பிட முடிந்தது. கடந்த 30 ஆண்டுகளாக மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்து வருவதுடன், முதுமையும் மறைந்து வருகிறது என இந்த ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் ஜோன் ஐன்மால் தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தில் தமது 95வது பிறந்தநாளை கொண்டாடும் மக்களின் எண்ணிக்கை அண்மைய காலங்களில் சுமார் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
மனித ஆயுட்காலம் சமூக நல்வாழ்வின் அளவுகோல் என நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நெதர்லாந்து விஞ்ஞானிகளின் ஆய்வுகள் முந்தைய அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கைகளை போலே உள்ளதாகவும் நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்களால் வெளிப்படுத்தப்பட்ட அதே அதிகபட்ச வயது வரம்பை அமெரிக்க விஞ்ஞானிகளும் அடையாளம் கண்டுள்ளனர்.
எனினும் தமது நாட்டில் தற்போது உள்ள முதியோர்கள் தம்முடைய முன்னோர்கள் போல் நீண்ட காலம் வாழ்வதில்லை எனவும் விளக்கமளித்துள்ளனர்.
நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்புகளுக்கு 'Extreme Value Theory' என்ற சிறப்பு புள்ளியியல் அணுகுமுறையைப் பயன்படுத்தியுள்ளனர்.
தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும் பல்வேறு சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும்.
ஆனால் 122 ஆண்டுகள் மற்றும் 164 நாட்கள் வாழ்ந்த French supercentenarian Jeanne Calment,என்ற பெண்மணி தனது வாழ்நாளின் அனைத்து ஆயுட்கால வரம்புகளையும் தாண்டி வாழ்விட்டார் என ஐன்மால் கூறியுள்ளார்.
இவரது வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகளின் விபரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.