ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய கடற்படை கப்பல் சேதம்: உலகின் முக்கியச் செய்திகளின் தொகுப்பு

OruvanOruvan

World News updates 05.03.2024

ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய கடற்படை கப்பல் சேதம்

கருங்கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (05) அதிகாலை ட்ரோன்களின் தாக்குதலுக்குள்ளான ரஷ்யக் கடற்படை கப்பல் சேதமடைந்ததாக உக்ரேன் தெரிவித்துள்ளது.

OruvanOruvan

Footage released by Ukraine purported to show the Sergey Kotov damaged by drones

அமெரிக்க விமான விபத்தில் ஐந்து பேர் பலி

அமெரிக்காவின் டென்னசி மாநிலம், நாஷ்வில்லியில் நெடுஞ்சாலை அருகே இன்று சிறியரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது என்ஜினில் கோளாறு காரணமாகவே, விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் - சீனக் கப்பல்கள் மோதலில்

சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் கடலோர பாதுகாப்பு கப்பல்கள் செவ்வாயன்று தென் சீனக் கடலில் மோதிக்கொண்டன, இரு நாடுகளின் சர்ச்சைக்குரிய நீர்நிலைகள் தொடர்பான அண்மைய மோதல் இதுவாகும்.

OruvanOruvan

Philippine and Chinese Boats Collide

ஈரானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் எட்டுப் பேர் பலி

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

OruvanOruvan

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை இழந்த எலான் மஸ்க்

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை எலான் மஸ்க் இழந்துள்ளார்.

அதன்படி, டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சரிந்ததன் விளைவாக உலக பணக்காரர் என்ற அந்தஸ்தை எலான் மஸ்க் இழந்துள்ளார்.

லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல்; இஸ்ரேலில் இந்தியர் பலி

லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லை பகுதியான மார்கலியோட் அருகே உள்ள பழத்தோட்டத்தை தாக்கியதில் ஒரு இந்தியர் கொல்லப்பட்டார், மேலும் இருவர் காயமடைந்தனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

OruvanOruvan

Indian man killed in Israel in missile attack from Lebanon,

15 அடி ஆழ அருங்காட்சியகம்; வெண்கலச் சிலை - நாளை முதல் திறப்பு

கலைஞர் நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகத்தை பொதுமக்கள் நாளை முதல் பார்வையிட அனுமதிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இதற்காக இணையதளம் மூலம் அனுமதி சீட்டு பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

OruvanOruvan

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு - 39 பேர் உயிரிழப்பு

பலத்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் 39 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

OruvanOruvan

காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வு

காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய மருத்துவ வசதியின்மை காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது.இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்க ளின் எண்ணிக்கை 30000 கடந்துள்ளது.

OruvanOruvan

டிரம்பை தகுதி நீக்கம் செய்வதற்கான முயற்சிக்கு முற்றுப்புள்ளி

கிளர்ச்சிக்கு எதிரான அரசியலமைப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி நீக்கம் செய்வதற்கு தனிப்பட்ட மாநிலங்கள் மேற்கொண்ட முயற்சிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

OruvanOruvan

மஹராஷ்டிராவில் கார் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

இந்தியாவின் மஹராஷ்டிராவில் சுவரொன்றின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுவர் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. மேலும் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.