பாகிஸ்தான் வெள்ளத்தில் 37 பேர் பலி: அசாத் காஷ்மீர் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள அசாத் காஷ்மீர் மற்றும் பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் 48 மணி நேரத்தில் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வீடுகள் இடிந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பலுசிஸ்தான் மற்றும் பிவிகே ஆகிய இடங்களில் தலா 5 பேர் உயிரிழந்துள்ளனர். குவாதார் துறைமுக நகரம் வெள்ளத்தில் சிக்கியுள்ளது.
சீனா-பாகிஸ்தானை இணைக்கும் காரகோரம் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.