ட்ரம்பின் சிறப்புரிமை தொடர்பான வழக்கு விசாரணை: உயர் நீதிமன்றம் தீர்மானிக்க முடிவு

OruvanOruvan

Trump

கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவினை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமையின் பிரகாரம் குறித்த வழக்கினை தள்ளுபடி செய்யக் கோரி ட்ரம்ப்பின் சட்டத்தரணிகள் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ட்ரம்ப் களமிறங்கப் போவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதேவேளை ட்ரம்ப்பின் கோரிக்கையினை கீழ் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.