காணாமற்போய் 120 ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்: கடலில் மிதந்த சடலங்கள்

OruvanOruvan

ஆழ்கடல் ஆய்வாளர்கள் அதிர்ஷ்டவசமாக, 120 ஆண்டுகளுக்குமுன் மர்மமான முறையில் காணாமற்போன ஒரு கப்பலின் பாகங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

எஸ்எஸ் நெமிசிஸ் கப்பல், 1904ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவுஸ்திரேலியக் கரைக்கருகே காணாமற்போனது.

மெல்பர்னுக்கு நிலக்கரி ஏற்றிச்சென்ற அக்கப்பல், நியூ சவுத் வேல்ஸ் பகுதிக்கு அருகே வலுவான புயலில் சிக்கிக்கொண்டதாகவும் அதில் 32 சிப்பந்திகள் இருந்ததாகவும் கூறப்பட்டது. அவர்கள் அவுஸ்திரேலியா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

சில வாரங்கள் கழித்து, சிப்பந்திகள் சடலங்களும் கப்பலின் சிதைவுகளும் சிட்னியிலிருந்து சிறிது தொலைவில் காணப்பட்டன.

கிட்டத்தட்ட 240 அடி (73 மீட்டர்) நீளமான அக்கப்பல் எங்கே மூழ்கியது என்ற தகவல் புதிராகவே இருந்துவந்தது.

காணாமற்போன சரக்குகளைத் தேடிய நிறுவனமொன்று எஸ்எஸ் நெமிசிஸ் கப்பலின் சிதைவுகளைக் கண்டது.

நீருக்கடியில் ஏறத்தாழ 525 அடி ஆழத்தில், அது புதையுண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

புயலில் அக்கப்பலின் இயந்திரம் பழுதானதால் அது மூழ்கியிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.