அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பாரிய காட்டுத்தீ: ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

OruvanOruvan

Texas wildfires

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருந்த பசுமையான மரங்கள் எரித்து சாம்பலாகியுள்ளன.

காட்டுத்தீ காரணமாக அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அரசு வெளியேற்றி வருகிறது.

ஏற்கனவே 2 லட்சம் ஏக்கர் வனப்பகுதி காட்டுத்தீ காரணமாக எரிந்துள்ளது.

பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத்தீ

காட்டுத்தீ வேகமாக பரவி வருவது அங்குள்ள மக்களுக்கும், அரசுக்கும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

இதன் காரணமாக அவசர கால நிலைமையை அறிவித்துள்ள டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட், சுமார் 60 கிராமங்களில் பநிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.

அத்துடன் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த காட்டுத்தீயானது பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத்தீ எனக்கூறப்படுகிறது.

கடுமையான வெயில், வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக வடக்கு டெக்சாஸில் காட்டுத்தீ ஏற்பட்டது.

கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட இ்நத காட்டுத்தீயானது டெக்சாஸ் மாநில வரலாற்றில் ஐந்தாவது பெரிய காட்டுத்தீ என்பது குறிப்பிடத்தக்கது.

வறண்ட வான்லையால் ஏற்பட்டுள்ள மின்னல் தாக்குதல் காரணமாக அமரில்லோ நகரில் பல தசாப்தங்களாக இயங்கி வரும் அமெரிக்க அணு ஆயுத மையத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக Pantex தெரிவித்துள்ளது.

கனடாவின் நகரமொன்றிலும் காட்டுத்தீ பரவியுள்ளது

மரங்கள் தீப்பிடித்து எரிந்ததால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஓக்லஹோமா மாநில எல்லையில் உள்ள ஹெம்பில் மற்றும் ஹட்சின்சன் மாவட்டங்களுக்கும் தீ பரவியுள்ளது.

மியாமி மற்றும் கனேடிய நகரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றுமாறு செனட்டர் கெவின் ஸ்பார்க்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கனடிய நகரமொன்றிலும் கட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால், ஸ்கெல்லிடவுன், வீலர், அலிசன் மற்றும் பிரிஸ்கோ நகரங்களைச் சேர்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் மொத்தம் 1 மில்லியன் மக்கள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவை தொடர்ந்து பல ஆண்டுகளாக காட்டுத்தீ உலுக்கி வருகிறது.