மேற்கு கரையின் புதிய குடியிருப்புக்கள் சட்டத்திற்கு முரண்: சர்வதேச விதிகளை மீறுவதாகவும் குற்றச்சாட்டு

OruvanOruvan

Israel

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மேற்கு கரையில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படவுள்ள புதிய குடியிருப்பு சர்வதேச சட்டத்திற்கு முரணானது என ஜனாதிபதி ஜோ பைடனின் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் அரசு ஆக்கிரமிப்பு செய்த பகுதியில் சுமார் 1000 வீடுகளை அமைத்து புதிய குடியிருப்புக்களை ஏற்படுத்த முற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆர்ஜன்டினா தலைநகரில் ஊடகவியலாளர்கள்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிலிங்டனிடம் வினவிய போது, வொஷிங்கடன் இது தொடர்பில் அவதானிப்புக்களைச் செலுத்திவருதாக நழுவல் போக்கில் பதிலளித்திருந்தார்.