மீன்பிடி மானிய வரைபிற்கு பசுபிக் தீவுகள் எதிர்ப்பு: சுற்றுச்சூழல் குறித்தும் குற்றச்சாட்டு
உலக வர்த்தக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கொண்டுவரப்பட்ட மீன்பிடி மானியம் தொடர்பான வரைபை பசுபிக் தீவுகள் எதிர்த்துள்ளன.
குறித்த மாநாடு டுபாயில் நடைபெற்றுவரும் நடைபெற்றுவருகின்றது.
இந்த வகையில் மீன்பிடி தொடர்பில் கொண்டுவரப்பட்ட வரைபில் சொல்லப்பட்ட மானியம் போதுமானதல்ல என பசுபிக் தீவுகள், பிஜி தீவுகள், பப்புவா நியு கினியா, சொலோமன் தீவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
பிஜியின் பிரதி பிரதமர் மனோ செரு கமிகமிக கருத்துத் தெரிவிக்கையில், பசுபிக் தீவுகளின் சுற்றுச்சூழல் குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும், வழங்கப்படும் மானியங்களுக்கு உச்சவரம்பு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.