உடல் பருமனால் 100 கோடி மக்கள் பாதிப்பு: உலகின் முக்கியச் செய்திகளின் தொகுப்பு...

OruvanOruvan

Short Story - world

உடல் பருமனால் 100 கோடி மக்கள் பாதிப்பு

உலகளவில் உடல் பருமனால் வாழும் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களின் மொத்த எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளதாக த லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வுத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

அமெரிக்காவில் சீக்கிய இசையமைப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

சீக்கியர்களுக்கான கீர்த்தனை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த 23 வயதான இசையமைப்பாளர் ராஜ் சிங் என்ற கோல்டி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.கீர்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு குருத்வாராவில் இருந்து வெளியில் வந்தபோது சம்பவம் நடந்துள்ளது.இந்த நிலையில்,ராஜாசிங்கின் உடலை இந்தியா கொண்டு வர இந்திய மத்திய அரசு உதவ வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாய்லாந்தில் கஞ்சா பயன்படுத்த தடை

தாய்லாந்து அரசாங்கம் இவ்வருட இறுதியில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக கஞ்சா பயன்படுத்துவதை தடை செய்ய தீர்மானித்துள்ளது.

எனினும், கஞ்சாவை மருந்துக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்க ரஷ்யா தயார்

கடந்த ஜனவரி மாதம் விமான தாக்குதலில் பலியானவர்களின் உடல்களை உக்ரையினுக்கு ஒப்படைப்பதற்கு ரஷ்யா தயாராகிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்ய மனித உரிமை அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் குழந்தைகளிடையே மனச்சோர்வு அதிகரிப்பு

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேலில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மனச்சோர்வு அடையும் வீதம் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெண் பிள்ளைகள் மனச்சோர்வுக்காக மருந்து உட்கொள்ளும் 65 வீதமாக அதிரித்துள்ளது.

ஈரானில் இன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தல்

ஈரானின் பாராளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. பாராளுமன்றத்தின் கீழ் அவை மற்றும் மேலவை ஆகியவற்றுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 85 மில்லியனான ஈரானின் மொத்த தொகையில் 61 மில்லியன் பேர் இன்றைய தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

உணவு வாங்க திரண்ட மக்கள் மீது இரக்கமின்றி துப்பாக்கி சூடு - 104 பேர் உயிரிழப்பு

காசாவில் உணவு வாங்குவதற்காக திரண்ட மக்கள் மீது இரக்கமே இன்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த துப்பாக்கி சூட்டில் 104 பேர் பரிதாபகரமாக உயிரிழந்தனர். ஆனாலும் இந்த சம்பவத்தை இஸ்ரெல் மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

இளவரசி கேட் மிடில்டனை காணவில்லை

வேல்ஸ், இளவரசி கேட் மிடில்டனை கடந்த இருவாரங்களாக காணவில்லை என இங்கிலாந்தில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. இதனால் அரச குடும்பத்தில் புதிய பிரச்சினை எழுந்துள்ளது.

OruvanOruvan

பிரதமா் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு

மைக்ரோசாஃப்ட் துணை நிறுவனரான பில்கேட்ஸ் இந்திய பிரதமா் மோடியை சந்தித்தாா். செயற்கை நுண்ணறிவு, பெண்கள் முன்னேற்றம் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

OruvanOruvan