காசாவில் 30,000 பேர் பலி: உலகின் முக்கியச் செய்திகளின் தொகுப்பு...
காசாவில் 30,000 பேர் பலி
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் 30,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிச்சில் நிலத்தின் விலைகள் இரட்டிப்பாகியுள்ளது
சூரிச் நகரில் நிலத்தின் விலை சமீப ஆண்டுகளில் பாரியளவில் உயர்ந்துள்ளது. கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்ட நகர புள்ளிவிவரங்களின்படி, கட்டிடம் உட்பட சதுர மீட்டருக்கான மொத்த விலைகள் 2010 முதல் 4,300 பிராங்குகளிலிருந்து 8,700 பிராங்குகளாக இரட்டிப்பாகியுள்ளன.
பாகிஸ்தானுக்கு இரண்டு பில்லியன் டொலர்களை வழங்கும் சீனா
பாகிஸ்தானுக்கு சீனா இரண்டு பில்லியன் டொலர்களை கடனாக வழங்க உள்ளதாக பாகிஸ்தான் இடைக்கால அரசாங்கத்தின் நிதியமைச்சர் ஷம்சாட் அக்தார் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு பில்லியன் டொலர் கடன் மார்ச் மாதம் கிடைக்க உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக சிகரட் கடத்தல்-இலங்கையர் உட்பட 6 பேர் அவுஸ்திரேலியாவில் கைது
அவுஸ்திரலியாவின் விக்டோரியா மாநிலத்திற்கு சட்டவிரோதமாக 10 மில்லியன் சிகரட்டுக்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் உட்பட 6 பேர், மெல்பேர்னில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்; காசாவில் இறப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் விஞ்சியது
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து காசாவில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 30,000 க்கும் அதிகமாக உள்ளது என்று காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உணவின்மையால் 70 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
காசாவில் உள்ள 77 பலஸ்தீனியர்கள் உணவின்மையால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் துப்பாக்கி பிரயோகத்தில் 250 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லீப் வருடத்தை பதிவு செய்யாததால் மூடப்பட்ட எரிபொருள் நிலையங்கள்
நியுசிலாந்தில் தானியங்கி எரிபொருள் நிலையங்கள் அனைத்தும் இன்று லீப் வருடம் என்பதால் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், மென்பொருள் கோளாறு எனவும் லீப் வருடத்தை பதிவு செய்யாததால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டதால் மக்கள் பெரும் சௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானுக்கு சீனா 2 பில்லியன் டொலர் கடனுதவி
பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டொலர் கடனை சீனா வழங்கியுள்ளது என்று வியாழனன்று (29) ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு அளித்த பதிலில் பாகிஸ்தானின் காபந்து அரசாங்க நிதி அமைச்சர் ஷம்ஷாத் அக்தர் உறுதிப்படுத்தினார்.
பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தென் கொரிய வைத்தியர்களின் உரிமம் இரத்து
தென்கொரியாவில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான இளம் வைத்தியர்கள் இன்று (29) பணிக்கு சமூகமளிக்காவிட்டால் அவர்களின் மருத்துவ உரிமம் இரத்து செய்யப்படுமென தென்கொரிய அரசு எச்சரித்துள்ளது. பணிபகிஷ்கரிப்பினால் வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் தின்டோரி மாவட்டத்தில் கிராம மக்களை ஏற்றிச் சென்ற வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான நிலையில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புகலிட கோரிக்கை விண்ணப்பங்கள் அதிகரிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பிரனருக்கிடையிலான யுத்தத்தை அடுத்து, பாலஸ்தீனியர்களிடமிருந்து, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான புகலிட கோரிக்கை விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாக ஏதிலிகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய முகவரகம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் பணிநிறுத்தத்தை தற்காலிகமாக தவிர்க்க ஒப்பந்தம் கைச்சாத்து
நிதியுதவிக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்னதாக அரசாங்கத்தின் பணிநிறுத்தத்தை தற்காலிகமாக தவிர்ப்பதற்கு அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு தசாப்தங்களில் 10 அமெரிக்க அரச பணிநிறுத்தம் அல்லது பகுதியளவு பணிநிறுத்தம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.