மன்னர் கொன்ஸ்டன்டைனின் நினைவுநாள் வில்லியம் பங்கேற்கவில்லை: தனிப்பட்ட காரணம் என அறிவிப்பு

OruvanOruvan

Prince William

கிரோக்கத்தின் மறைந்த முன்னாள் மன்னர் கொன்ஸ்டன்டைனின் நினைவுநாள் வழிபாட்டில் இளைவரசர் வில்லியம் கலந்துகொள்ளவில்லை.

இன்று காலை வின்சர் கோட்டையில் நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனிப்பட்ட காரணத்தினால் இளைவரசர் வில்லியம் கலந்து கொள்ளவில்லை என அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இளவரசி கேட் வில்லியத்திற்கு கடந்த மாதம் வயிற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை காரணமாக வில்லியம் நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகின்றார்.

இதேவேளை இளவரசி கேட் நோயிலிருந்து விரைவாக மீண்டுவருவதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.