ஜப்பானில் 90 ஆண்டுகளின் பின் ஏற்பட்ட மாற்றம்: திருமணங்களின் எண்ணிக்கையும் குறைந்தது
ஜப்பானில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
சென்ற ஆண்டு வரலாறு காணாத அளவில் அந்நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்துபோனது. 2022ஆம் ஆண்டுப் பதிவானதைக் காட்டிலும் சென்ற ஆண்டுக்கான பிறப்பு விகிதம் 5.1 விழுக்காடு குறைந்து 758,631ஆகப் பதிவானது.
ஜப்பானில் சென்ற ஆண்டு நிகழ்ந்த திருமணங்களின் எண்ணிக்கை 5.9 விழுக்காடு குறைந்து 489,281ஆகப் பதிவானது.
90 ஆண்டுகளில் முதன்முறையாக அந்நாட்டில் நடந்த திருமணங்களின் எண்ணிக்கை 500,000க்குக்கீழ் குறைந்தது.
ஜப்பானின் மக்கள்தொகை குறைவதற்கான அறிகுறிகளாக இந்தப் புள்ளி விவரங்கள் விளங்குகின்றன.