ஜி20 அமைப்பின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் பிராந்திய முரண்பாடு குறித்து ஆய்வு: உலகின் முக்கியச் செய்திகளின் தொகுப்பு...

OruvanOruvan

28.02.2024 - World Short News

ஜி20 அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் நிதியமைச்சர்களின் மாநாடு இந்த வாரம் பிரேசிலில் ஆரம்பமாகவுள்ள நிலையில், பிராந்திய முரண்பாடுகளினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காசா மற்றும் உக்ரையன் போர் காரணமாக உலக அரங்கில் பாரிய பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நோபல் பரிசு வென்ற மனித உரிமை ஆர்வலருக்கு சிறை தண்டனை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து கருத்து தெரிவித்த மனித உரிமை ஆர்வலருக்கு மாஸ்கோ நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.மனித உரிமைகள் குழு நினைவகத்தின் இணைத்தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மனித உரிமை ஆர்வலர் ஒலெக் ஓர்லோவ் என்பவருக்கே 30 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மெக்குவாரி தீவு பகுதியில் நிலநடுக்கம்

மெக்குவாரி (Macquarie) தீவு பகுதிகயில் புதன்கிழமை மாலை (05:56:13 GMT) 5.4 மெக்னிடியூட் அளவில் நிலடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் ஆழம் 10.0 கிலோ மீற்றராக பதிவாகியுள்ளது.

OruvanOruvan

5.4-magnitude quake hits Macquarie Island region

பைடனுக்குப் பதிலாக மிச்செல் ஒபாமா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் முதல் பெண்மணி போட்டியிட வேண்டும் என ஜனநாயக கட்சியினர் விரும்புவதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

OruvanOruvan

ஹிமாச்சல் பிரதேச அமைச்சர் பதவி விலகல்

ஹிமாச்சல் பிரதேசம் அமைச்சர் விக்ரமாதித்ய சிங் பதவி விலகியுள்ளார். மாநிலங்களவை அமைச்சு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் சிலர் பா.ஜனதாவுக்கு வாக்களித்தமை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாலியில் பஸ் கவிழ்ந்ததில் 31 பேர் மரணம்

மாலியின் மேற்கு நகரமான கெனிபாவுக்கு அருகே செவ்வாய்க்கிழமை (27) பஸ் ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர். கெனிபாவிலிருந்து அயல் நாடான புர்கினா பாசோவுக்குச் சென்று கொண்டிருந்த பஸ், பாகோ ஆற்றைக் கடக்கும் பாலத்தில் இருந்து கவிழ்ந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

OruvanOruvan

Dozens Die After Bus Falls Off Bridge in Mali

பிரெஞ்சு திரைப்பட நட்சத்திரத்தின் வீட்டில் இருந்து 72 துப்பாக்கிகள் மீட்பு

திரையுலக ஜாம்பவான் அலைன் டெலோனின் (Alain Delon) வீட்டில் இருந்து 72 துப்பாக்கிகள் மற்றும் 3,000க்கும் மேற்பட்ட தோட்டாக்களை பிரெஞ்சு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பாரிஸுக்கு தெற்கே சுமார் 135 கிமீ (84 மைல்) தொலைவில் உள்ள டூச்சி-மான்ட்கார்பனில் உள்ள நடிகரின் இல்லத்திலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.

OruvanOruvan

Alain Delon in a still from The Samourai (1967)

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் வாழ்த்து

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இளைஞர்களிடையே ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கு தனது அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

OruvanOruvan

கடுமையான சவால்களுக்கு இடையே சிங்கப்பூர் வளம் பெறும்

கடுமையான சவால்களுக்கு இடையே சிங்கப்பூர் மேலும் வளம் பெறும் சூழல் இருப்பதாக அந்நாட்டு துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

போரில் ரஷ்யா வெற்றி பெறக் கூடாது - இம்மானுவேல் மெக்ரோன்

ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புடன் நிலையாக இருக்க ரஷ்யா- உக்ரைன் போரில் ரஷ்யா தோற்க வேண்டியது அவசியம் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல்மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

”ரஷ்யா வெற்றி பெறாமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன்தான் நாங்கள் போரிடுகிறோமே தவிர ரஷ்யா மக்களுடன் அல்ல, ” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.