இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு இணங்குவதாக அமெரிக்கா தெரிவிப்பு: ரமழான் மாதத்தை முன்னிட்டு நகர்வு

OruvanOruvan

Stop Gaza attacks

முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

மேலும் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான விடயத்தை ஹமாஸ் அமைப்பு ஆய்வு செய்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை காசாவில் பாதிப்புக்குள்ளாகியுள்ள வைத்தியசாலைகள் மற்றும் வெதுப்பகங்களை புனரமைப்பு செய்வதற்காக 500 உதலி வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கிடையில் மோதல் வெடித்திருந்தது.

இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ரமழான் மாதத்தை முன்னிட்டு இந்த போர் நிறுத்த முன்னெடுக்கப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சர்வதேச ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்ரேலின் மூர்க்கத்தனமான தாக்குதலால் பலஸ்தீன மக்கள் பாரியளவில் படுகொலை செய்யப்படுகின்றனர்.

இதன் காரணமாக இஸ்ரேல் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை இழக்க நேரிடும் எனவும் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை மோதல் காரணமாக இரு தரப்பிலும் உள்ள அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாகவும், இதனைத் தவிர்ப்பதற்கு இருதரப்பும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சமாதான உடன்படிக்கையினை ஏற்படுத்த வேண்டும் எனவும் பைடன் கோரிக்கை விடுத்துள்ளார்.