உத்தர பிரதேச பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து - ஐவர் பலி: உலகின் முக்கியச் செய்திகளின் தொகுப்பு

OruvanOruvan

25.02.2024 - World Short News

உத்தர பிரதேச பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து - ஐவர் பலி

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் கோக்ராஜ் அருகே பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ வித்தில் மேலும் 8 காயமடைந்துள்ளனர்.

OruvanOruvan

அமெரிக்காவில் G-Pay சேவை நிறுத்தம்

எதிர்வரும் ஜூன் மாதம் 4ம் திகதி முதல் அமெரிக்காவில் G-Pay வசதி நிறுத்தப்படும் என Google நிறுவனம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் G-Pay செயலியிலுள்ள வசதிகளை Google Wallet இல் பயனபடுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் – குடியரசுக் கட்சி சார்பாக ட்ரம்ப் தேர்வு

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பாக கரோலினா மாகாணத்தில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ட்ரம்ப் மற்றும் நிக்கி ஹாலே ஆகியோர் வேட்பாளராக போட்டியிட்டனர்.

யேமனில் உள்ள ஹூதி இலக்குகள் மீது அமெரிக்கா,இங்கிலாந்து தாக்குதல்

யேமனில் உள்ள 18 ஹூதி இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போர் விமானங்கள் தாக்குதல்களை நடாத்தியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. நட்பு நாடுகளின் நான்காவது கூட்டு நடவடிக்கை இதுவெனசர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.