பிலிப்பைன்ஸ் கப்பலை தடுக்க முயற்சித்த சீன கப்பல்: தென் சீனக்கடலில் தொடரும் பதற்றம்

OruvanOruvan

China Coast Guard Ship AFP

மீனவர்களுக்கு பொருட்களை எடுத்துச் சென்ற தமது நாட்டு கப்பலை சீனாவின் கடலோர பாதுகாப்பு படையினர் தடுக்க முயற்சித்தது என பிலிபைன்ஸ் அஅரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த சம்பவமானது தென் சீனக்கடலில் சர்சைக்குரிய பகுதியில் இரண்டு வாரங்களில் நடந்துள்ள இரண்டாவது சம்பவமாகும்.

கடந்த 22 ஆம் திகதி மீனவர்களுக்கு எரிபொருளை விநியோகம் செய்துகொண்டிருந்த பிலிப்பைன்ஸ் கப்பலை, ​சீனக் கடலோர பாதுகாப்பு படையின் கப்பல் மற்றும் மூன்று சீனக் கப்பல்கள் இடையூறுகள் செய்ததாக பிலிப்பைன்ஸ் கடலோர பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.

நான்கு சீனக் கப்பல்களில் மூன்று கப்பல்கள், பிலிப்பைன்ஸ் கப்பலுக்கு 100 மீட்டர் சுற்றுவட்டாரத்துக்குள் வந்து, ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அவை நகர்ந்து சென்றதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த வாரமும் இப்படியான சம்பவம் நடந்தது-பிலிப்பைன்ஸ் அரசாங்கம்

எனினும் தமது கப்பலின் தலைமை மாலுமி திறமையாக செயற்பட்டதால், ஆபத்தை தவிர்க்க முடிந்ததாக தென் சீனக் கடல் விவகாரங்களுக்கான பிலிப்பைன்ஸ் கடலோர பாதுகாப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இதே கடல்ப் பகுதியில் இப்படியான மோதல் சம்பவம் ஒன்றை எதிர்நோக்கியதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது.

பிலிப்பைன்ஸூக்கு அருகில் அமைந்துள்ள ஸ்கார்பருக் ஷோல் என்ற தீவை சீனா கடந்த 2012 ஆம் ஆண்டு கைப்பற்றியதில் இருந்து இரு நாடுகளுக்கு இடையில் மோதல்கள் நிலவி வருகின்றன.

2012 ஆம் ஆண்டு முதல் சீனா தனது கடல் பாதுகாப்பு ரோந்து படகுகளை அந்த தீவுக்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளது.