வடகொரியாவின் ஆத்திரமூட்டல்; கலந்துரையாடிய அமெரிக்க - சீன அதிகாரிகள்: புட்டின் கிம்முக்கு பரிசளித்த கார் நிறுவனத்துக்கு எதிராக தடை

OruvanOruvan

Russian President Vladimir Putin and North Korean leader Kim Jong Getty Images

வட கொரியாவிற்கு ரஷ்ய பீரங்கி குண்டுகளை வழங்குவது மற்றும் கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவின் ஆத்திரமூட்டல்கள் குறித்து சீன மற்றும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் காணொளி மாநாட்டின் மூலம் நேற்று (23) கலந்துரையாடியுள்ளனர்.

அதேவேளை, வடகொரியா அண்மையில் தென்கொரிய எல்லையில் பீரங்கி குண்டுகளை பயன்படுத்தி பயிற்சிகளை நடத்தியது.

இதனால் அந்த பகுதியில் உள்ள தென்கொரியாவுக்கு சொந்தமான தீவில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

மேலும் வடகொரியா அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதனை செய்து அவ்வப்போது தென்கொரியாவை ஆத்திரமூட்டி வருகிறது.

கார் நிறுவனத்துக்கு எதிராக தடை

ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடின,வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கு ஆடம்பர சொகுசு லிமோசின் காரை பரிசாக வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காரை தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க பொருளாதார தடைகளை விதித்தது.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், அலெக்ஸி நவல்னியின் மரணத்துக்கு பின்னர் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த 500 தடைகள் பட்டியலில் லிமோசின் கார் நிறுவனமான Aurus நிறுவனத்தையும் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

Aurus luxury sedan