ஸ்பெயின் நாட்டில் அடுக்குமாடியில் பாரிய தீ விபத்து: ஒன்பது பேர் உயிரிழப்பு

OruvanOruvan

Spain fire

ஸ்பெயின் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான வலேன்சியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பாரிய புகை வெளிவந்ததை தாம் அவதானித்தாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீயினால் தமக்கு பாரிய அதிர்ச்சி ஏற்பட்டிருந்ததாக குடியிருப்பாளர் ஒருவர் ஊடகத்திடம் குறிப்பிட்டிருந்தார்.

110 குடும்பங்கள் தற்காலிகமாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அனர்த்தம் ஏற்பட்ட பகுதியினை பிரதமர் பேட்ரோ சான்சஸ் பார்வையிட்டிருந்தார்.

தீயினால் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் தீப் பரவல் குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.