உக்ரையின் சுதந்திரமடையும் வரை தொடர்ந்தும் ஆதரவு: ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் தெரிவிப்பு
உக்ரையன், ரஷ்யாவின் போர் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுதலை பெறும் வரையும் ஐரோப்பா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ரூசுலா வென் டிர் லெயன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரையன் மீது போர் தொடுத்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், போரினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூன்று ஐரோப்பிய தலைவர்கள் கிவ் நகரத்தை சென்றடைந்துள்ளனர்.
கனடா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் உக்ரையினுக்கு தமது ஆதரவினை தெரிவித்துவருகின்றன.
ரஷ்யாவின் போர் தொடுப்பானது அத்துமீறிய செயல் என உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டுவரும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவரின் கருத்து சர்வதேச ஊடகத்தில் பரவலாகப் பேசப்பட்டுவருகின்றது.
இதேவேளை அமெரிக்கா, ரஷ்யா மீது மேலும் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.