பிரித்தானியாவில் வீடுகளின் விலை உயர்கின்றது: அடமான விகிதங்களிலும் வீழ்ச்சி, அதிக விலை கொண்ட சொத்துக்கள் புறக்கணிப்பு
பிரித்தானியாவில் கடந்த ஆறு மாதங்களில் முதல் முறையாக வீடுகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெப்ரவரி மாதத்தில் வீட்டின் சராசரி விலை மூவாயிரம் பவுண்ஸ்க்கு அதிகமாக உயரந்துள்ளதாக Rightmoveஐ கோடிட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு வாரங்களில் ஒப்புக் கொள்ளப்பட்ட விற்பனை கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 16 சதவிகிதம் அதிகமாகவும், 2019 ஆம் ஆண்டின் சாதாரண சந்தையை விட மூன்று சதவிகிதம் அதிகமாகவும் இருப்பதாக தரவு வெளிப்படுத்துகிறது.
Property websiteஇன் படி, சந்தைக்கு வரும் அதிகமான வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்களால் இந்த மாற்றம் உந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அடமான விகிதங்கள் உச்சநிலையிலிருந்து கணிசமாகக் குறைந்துள்ளன, மேலும் 2022 மற்றும் 2023 இன் நிச்சயமற்ற நிலைக்குப் பிறகு இப்போது பரந்த அளவில் நிலையானதாக இருப்பதாக Rightmoveஇன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Rightmoveஇல் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் ஆகிய இருவரின் செயல்பாடும் கடந்த ஆண்டை விட ஏழு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அதிக விலை கொண்ட சொத்துக்கள் வாங்குபவர்களால் புறக்கணிக்கப்படுவதாக Rightmove எச்சரித்துள்ளது, எவ்வளவு செலவழிக்கிறார்கள் என்பதில் கவனமாக இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஆரம்பத்திலிருந்தே சரியான விலையை நிர்ணயிக்கும் விற்பனையாளர்கள் வாங்குபவரைக் கண்டுபிடித்து தங்கள் வீட்டை விரைவாக விற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.