அமெரிக்க ‘ட்ரோனை’ சுட்டுவீழ்த்திய ஹூதிக்கள்: உலகின் முக்கியச் செய்திகளின் தொகுப்பு

OruvanOruvan

22.02.2024 - World Short News

மஹராஷ்டிராவில் வைத்தியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தியாவின் மஹராஷ்டிராவில் சுமார் 8,000 வைத்தியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.தங்கியுள்ள விடுதிகள் வாழ்க்கை முறைக்கு உகந்தவாறு இல்லையெனவும் வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகையை அதிகரிக்குமாறு அரசிடம் கோரியும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென குறித்த வைத்தியர்கள் சுமத்தியுள்ளனர்.

அமெரிக்க ‘ட்ரோனை’ சுட்டுவீழ்த்திய ஹூதிக்கள்

செங்கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த எம்க்யு-9 வகையைச் சோ்ந்த அமெரிக்காவுக்குச் சொந்தமான அதிநவீன ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை மூலம் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனா்.

24 சந்தர்ப்பங்களில் அமெரிக்க இரகசிய சேவை அதிகாரிகளை கடித்த பைடனின் நாய்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வளர்ப்பு நாய் 2022 ஒக்டோபர் - 2023 ஜூலை ஆகிய காலப் பகுதிகளுக்கு இடையில் குறைந்தது 24 சம்பவங்களில் அமெரிக்க இரகசிய சேவை அதிகாரிகளை கடித்துள்ளதாக நம்பகத் தகுந்த ஆதரங்களை மேற்கொள்ளிட்டு சிஎன்என் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

OruvanOruvan

Joe Biden dog Commander bit Secret Service agents at least 24 times

அமைதிக்கான நோபல் பரிசு எலான் மஸ்க்கிற்கு பரிந்துரை

2024-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை எலான் மஸ்க்கிற்கு வழங்க வேண்டும் என நார்வே பாராளுமன்ற உறுப்பினர் மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டுவிட்டரை 2022- இல் வாங்கி எக்ஸ் என பெயர்மாற்றம் செய்தார். சுதந்திர பேச்சை வெளிப்படுத்த இதனை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேற்குக் கரையில் பயங்கரவாதத் தாக்குதல் ; ஒருவர் பலி, எட்டுப் பேர் காயம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் வியாழக்கிழமை (22) துப்பாக்கி தாரிகள் பல வாகனங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார், குறைந்தது எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

OruvanOruvan

Terror Attack Near West Bank

ஹமாஸை தடை செய்யும் மற்றுமோர் ஐரோப்பிய நாடு

கடந்த ஆண்டு இஸ்ரேலில் பாலஸ்தீன போராளிகள் குழு நடத்திய தாக்குதல்கள் சுமார் 1,200 பேரைக் கொன்று காசாவில் போரை தூண்ட வழிவகுத்த ஹமாஸைத் தடை செய்ய விரும்புவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் புதன்கிழமை கூறியது.

OruvanOruvan

Switzerland to Ban Hamas After Israel Attacks

கடல் வழிப் பாலத்தில் கப்பல் மோதி விபத்து; நீரில் மூழ்கிய பல வாகனங்கள்

சீனாவின் தெற்கு நகரமான குவாங்சூவில் அமைந்துள்ள கடல் வழிப் பாலத்தில் சரக்குக் கப்பல் ஒன்று வியாழன் அதிகாலை மோதி ஏற்பட்ட விபத்தில், பொதுப் பேருந்து உட்பட ஐந்து வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தன. விபத்தில் இருவர் பலியாகினர், ஒருவர் காயமடைந்தார். மூவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

OruvanOruvan

A cargo ship rammed into a bridge in China

பாலம் இடிந்து வீழ்ந்ததில் தொழிலாளர்கள் இருவர் பலி

நெதர்லாந்தின், லோகெமில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் இரண்டு தொழலாளர்கள் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

OruvanOruvan

bridge collapse in Dutch

அதிகப்படியான சுவேட்டர்களை அணிந்து கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க சிறுமி

அமெரிக்காவின் வோஷிங்டனை சேர்ந்த சோபியா ஹைடன் என்ற சிறுமி ஒரே நேரத்தில் 45 சுவேட்டர்களை அணிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.இவருக்கு முதல் இந்த உலக சாதனையை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுவன் தாமஸ் உமாம்போ பெற்றிருந்தார். தாமஸ் 2022 இல் ஒரே நேரத்தில் 40 சுவேட்டர்களை அணிந்து உலக சாதனை படைத்தார்.

OruvanOruvan

பாலியல் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் பிரபல அருட்தந்தை கைது

அவுஸ்திரேலியாவின் பிரபல அருட்தந்தை கிறிஸ்டோபர் சாண்டர்ஸ் கற்பழிப்பு மற்றும் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 74 வயதான அவர் மேற்கு அவுஸ்திரேலிய நகரமான புரூம் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். எவ்வாறாயினும், தன்மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

கனடாவில் வணிகர்களை அச்சுறுத்திய இந்தியர் கைது

கனடாவின் ஹாமில்டன் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் அச்சுறுத்தி மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பிராம்ப்டனில் வசிக்கும் ஹிதேஷ் பன்சால், வணிக உரிமையாளர்கள், குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறி மிரட்டி பணம் பறித்ததாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நெதர்லாந்தில் பாலம் இடிந்து விழுந்ததில் இருவர் பலி

நெதர்லாந்தில் பாலம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லோகெம் நகரில் கால்வாயின் மீது கட்டப்பட்டு வந்த பாலம், தொழிலாளர்கள் பெரிய உலோக வளைவை நகர்த்த முயற்சித்ததால், அதன் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்தது.