ஆறு வாரப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பைடன்: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...
ஆறு வாரப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பைடன்
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே மிகக் கடுமையான போர் நிலவி வருகிறது. இதனால் பசி, பட்டினி, நோய், மரணம் என காஸா மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், ஆறு வாரங்களுக்குப் போரை நிறுத்திவைக்கும்படி அமெரிக்கா அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது ரஸ்யா அதிருப்தி
ரஸ்யாவுக்கு வெளியேயுள்ள 300 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை மேற்கு நாடுகள் பல பறிமுதல் செய்துள்ளதாக ரஸ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியாள் சஹராவொ குறிப்பிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டுக்க பின்னரான ரஸ்யா உக்ரைன் மோதலையடுத்து தமக்கெதிரான பொருளாதார தடைகளை மேற்கு நாடுகள் மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹல்த்வானி வன்முறை; 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்
உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60 பேர் காயம் அடைந்த நான்கு நாட்களுக்குப் பின்னர், பன்பூல்பூரா பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளன - இந்திய ஊடகங்கள்
சுவீடன் பொழுதுபோக்கு பூங்காவில் தீ விபத்து
சுவீடனின், கோதன்பர்க்கில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் திங்கட்கிழமை பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இதனால் காயமடைந்த 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் - சர்வதேச செய்திகள்
தாய்லாந்து முன்னாள் பிரதமர் ஷினவத்ரா சிறை விடுமுறையில் விடுவிப்பு
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ர சிறை விடுமுறையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.தக்ஷினுக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததுடன் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.முதுமை, நோய் ஆகியவற்றின் பேரில் 930 கைதிகளுக்கு சிறை விடுமுறை வழங்கப்பட்டது.அவர்களில் தக்சின் ஷினவத்ராவும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசு
புதுடெல்லியை நோக்கி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெற்ற விவசாயிகளின் பேரணியில் கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர்கள் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பறெ்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்தே விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளதுடன், தற்போது அங்கு பதட்டமான சூழல் உருவாகி வருகிறது.
நியூயோர்க்கில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
நியூயோர்க்கில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா 17 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது
ரஷ்யா ஒரே இரவில் உக்ரைன் மீது 17 ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன் அவற்றில் 14 விமானங்களைவும் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றையும் தமது விமானப்படையினர் தாக்கிய அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.தரையில் இருந்து ஏவப்படும் நீண்டதூரம் சென்று தாக்கக்கூடிய எஸ்.300 ஏவுகணைகளை ரஷ்யா, தமது நாட்டின் மீது ஏவியதாக உக்ரைன் விமானப்படையினர் கூறியுள்ளனர்.
அவுஸ்திரேலிய பாடசாலைகளுக்கு பூட்டு
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கடும் வெப்பம் நிலவுவதால் பல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.வெப்ப காற்று, மின்னல் தாக்கம் என்பவற்றால் 38 பாடசாலைகளும், 17 முன்பள்ளி பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. 2019-2020 கறுப்பு கோடை காலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ அபாயத்தை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
59 ஆயிரம் இந்தியர்களுக்கு 2023ஆம் ஆண்டில் அமெரிக்க குடியுரிமை
2023ஆம் ஆண்டில் அமெரிக்க நாடானது, 8.7 இலட்சம் வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்க குடியுரிமையை வழங்கியுள்ளது. இதில் 59,100 பேர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களாகும்.
சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்தால் ஆண்மை நீக்கப்படும்
மடகஸ்கார் அரசு மிக கடுமையான தண்டனையை இப்போது அறிவித்துள்ளது. இதனடிப்படையில், புதிய சட்டத்தின்படி சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கு காஸ்ட்ரேட், அதாவது ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகக்குறைந்த சம்பளம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை
உலகில் குறைந்த சராசரி சம்பளம் பற்றிய பட்டியலில் இலங்கை 105வது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் ஆசியக் கண்டத்தில் ஏனைய நாடுகளை விட மிகவும் குறைந்த சம்பளம் கொண்ட நாடாகவும் இலங்கை (US$ 143.46) பெயரிடப்பட்டுள்ளது.