கனடாவில் சீக்கிய பிரிவினைவாதியின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு: குர்பட்வன்ட் சிங் பன்னுன்வின் நண்பர்

OruvanOruvan

Firing at Sikh separatist's house in Canada

கனடாவில் காலிஸ்தான் சீக்கிய பிரிவினைவாத போராளி ஒருவரின் வீட்டை இலக்கு வைத்து நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒன்டோரியோவில் வசிக்கும் இந்தர்ஜீத் சிங் கோசலின் வீட்டுச் ஜன்னலில் துப்பாக்கித் தோட்டாவால் ஏற்பட்ட துளை குறித்து தமக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக கூறப்படும் வீட்டில் நிர்மாணிப்பு பணிகள் நடைபெற்று வருவதுடன் எவரும் அதில் தங்கியிருக்கவில்லை.

கோசல், நியூயோர்க்கில் வசிக்கும் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான Gurpatwant Singh Pannun என்பவரின் நெருங்கிய நண்பர் எனக்கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் Gurpatwant Singh Pannunவை கொலை மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய அரசாங்க எதிர்பார்ப்பாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கனடாவும் அமெரிக்காவும் தெரிவித்திருந்தன.