அமெரிக்காவின் உத்தரவுகளை எட்டி உதறும் இஸ்ரேல்: கொலை நடுக்கத்துடன் ரஃபாவிலுள்ள அகதிகள்

OruvanOruvan

Biden urges Israel to protect Rafah civilians

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நம்பகரமான திட்டம் இல்லாமல் ரஃபாவில் இஸ்ரேலிய தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

ரஃபாவில் உள்ள பாலஸ்தீன மருத்துவர் ஒருவர் பிபிசி செய்திச் சேவையிடம் அங்குள்ள மக்கள் தற்சமயம் பெரும் அச்சத்தில் வாழ்கின்றனர் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் (Volker Turk), எந்தவொரு தாக்குதலும் பயங்கரமானதாக இருக்கும், மேலும் பல பொது மக்கள் இதில் கொல்லப்படலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமரின் சபதம்

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு (Benjamin Netanyahu) கடந்த வாரம், ரஃபாவிற்கு தரைவழி நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கு தயாராகுமாறு படையினருக்கு உத்தரவிட்டதாக அறிவித்தார்.

நகரில் மறைந்திருக்கும் ஹமாஸ் ஆயுததாரிகளை தோற்கடிப்பதாகவும் அவர் சபதம் பூண்டார்.

OruvanOruvan

Benjamin Netanyahu

மிகவும் கவலைக்கிடமாகியுள்ள ரஃபா நகரின் நிலை

ரஃபா - எகிப்தின் எல்லையில் - காசாவுக்குள் மனிதாபிமான உதவிக்கான ஒரே திறந்தவெளி நுழைவுப் புள்ளியாகும்.

ரஃபா அண்மைய நாட்களில் கடுமையான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளது, பல உயிரிழப்புகளும் அங்கு பதிவாகியுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் வெடிப்பதற்கு முன்பு 250,000 மக்கள் மட்டுமே எகிப்தின் எல்லையில் உள்ள நகரமான ரஃபாவில் வசித்து வந்தனர்.

தற்சமயம் 2.3 மில்லியன் காசாவின் மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்போது அங்கு இடம்பெயர்ந்து நெரிசலில் சிக்கியுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களில் பலர் தற்காலிக தங்குமிடங்களில் அல்லது கூடாரங்களில் பெரும் துயரமான சூழ்நிலையில் வாழ்கின்றனர், அவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் அல்லது உணவு போன்ற அடிப்படை வசதிகள் கிடைப்பதும் கேள்விக் குறியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

OruvanOruvan

Rafah has come under heavy Israeli air strikes in recent days

ரஃபாவில் இரு பணயக் கைதிகள் மீட்பு

ரஃபாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இரண்டு ஆண் இஸ்ரேலிய-அர்ஜென்டினா பணயக்கைதிகள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனையின் ஹமாஸ் போராளிகளினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 250 நபர்களில் இவர்கள் இருவரும் அடங்குவர் என்றும் இஸ்ரேல் சுட்டிக்காட்டியது.

ரஃபா மக்களின் பாதுகாப்புக்காக அமெரிக்கா மீண்டும் வேண்டுகோள்

வொஷிங்டனில் திங்களன்று (12) ஜோர்தான் மன்னர் அப்துல்லாவை சந்தித்த பின்னர், ரஃபா குடிமக்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

அங்குள்ள பலர் இடம்பெயர்ந்துள்ளனர், பலமுறை இடம்பெயர்ந்துள்ளனர், வடக்கே வன்முறையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர், இப்போது அவர்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

எனவே அவர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியம்.

மேலும் நாங்கள் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருக்கிறோம், காசாவில் இருந்து பாலஸ்தீனியர்கள் கட்டாயமாக இடம்பெயர்வதை நாங்கள் எதிர்க்கிறோம்

கடந்த வாரம், வெள்ளை மாளிகை, அங்குள்ள அகதிகளை உரிய முறையில் பரிசீலிக்காமல் ரஃபாவில் பாரிய இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று தெளிவாக கூறியுள்ளோம்.

ஹமாஸால் நடத்தப்படும் பாலஸ்தீனப் பகுதியான காசாவின் ஏனைய பகுதிகளில் இஸ்ரேலின் தரைப்படை நடவடிக்கைகளால் பல பாலஸ்தீனியர்கள் ஏற்கனவே வெளியேறியுள்ளனர்.

பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் இஸ்ரேல் திட்டமிட்ட தாக்குதலுக்கு எதிராக எச்சரித்துள்ளன.

இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் கேமரூனும் திங்களன்று ரஃபாவில் மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன் இஸ்ரேல் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று கூறியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Evan VucciEvan Vucci

Joe Biden Evan Vucci

இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்தவும் - ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் (Josep Borrell), காஸாவில் அதிகமான மக்கள் உயிரிழப்பதால் டெல் அவிவ்வுக்கு ஆயுதங்களை அனுப்புவதை உடன் நிறுத்துமாறு இஸ்ரேலிய நட்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

காசா நகரமான ரஃபாவில் தஞ்சமடைந்துள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் அங்கு திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு முன்னதாக வெளியேற்றப்பட வேண்டும் என்ற பெஞ்சமின் நெதன்யாகுவின் உத்தரவையும் தலைமை ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரி கடுமையாக சாடினார்.

OruvanOruvan

EU foreign policy chief Josep Borrell

இதுவரை பதிவான உயிரிழப்புகள்

2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேலில் குறைந்தது 1,200 பேர் ஹமாஸ் தலைமையிலான ஆயுததாரிகளால் கொல்லப்பட்டதையும், 253 பேர் பணயக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டதையும் அடுத்து, இஸ்ரேலின் இராணுவம் காசா பகுதியில் தனது தாக்குதல்களை தொடங்கியது.

சிறைப்பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளில் பலர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். எனினும், 134 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்று இஸ்ரேல் கூறுகிறது.

காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் திங்களன்று (12) முன்னைய நாளில் அதாவது ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் தாக்குதல்களால் காசாவில் 164 பேர் கொல்லப்பட்டதாகவும் 200 பேர் காயமடைந்ததாகவும் கூறியது.

ஒக்டோபர் 7 முதல் இதுவரை அங்கு 28,340 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 68,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் காசா சுகாதார அமைச்சு கூறுகின்றது.