தென் கொரியாவை ஆத்திரமூட்டும் வடகொரியா: பல ரொக்கெட் லோஞ்சர்களை பரிசோதித்துள்ளது
தென்கொரியாவை முக்கிய எதிரியாக அறிவித்துள்ள வடகொரியா, தொடர் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
வடகொரியா அண்மையில் பல ரொக்கெட் லோஞ்சர்களை பரீட்சித்து பார்த்தது. அதில் 240 மில்லி மீட்டர் பாலிஸ்டிக் ரொக்கெட் லோஞ்சர் ஷெல்கள் வெற்றிகரமாக இலக்கு நோக்கி செலுத்தப்பட்டுள்ளது.
ரொக்கெட் லோஞ்சர்கள் மற்றும் பாலிஸ்டிக் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவதில் இந்த சோதனை முக்கியமானதாக இருக்கும் என வட கொரியாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம், அயல் நாடான தென் கொரியாவின் எல்லையில் உள்ள ஒரு தீவில் வட கொரியா பீரங்கி குண்டுகளை பயன்படுத்தி பயிற்சிகளில் ஈடுபட்டது
வடகொரியா மீது தாக்குதல் நடத்தினால் தென் கொரியாவை அழித்து விடுவோம் என கிம் ஜோங் உன் அண்மையில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் வடகொரியாவின் இராணுவத் திறனை மேலும் அதிகரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் கிம் ஆலோசனைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.