59 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்: 8.7 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

OruvanOruvan

US Flags

அமெரிக்காவில் 2023 ஆம் ஆண்டு குடியுரிமை பெற்றவர்கள் சம்பந்தமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன் அதற்கு அமைய கடந்த ஆண்டு 59 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.

அமெரிக்க குடியுரிமை பெறுவதில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது.

உத்தியோபூர்வ அறிக்கையின் அடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 2023 நிதியாண்டில் சுமார் 8.7 லட்சம் வெளிநாட்டினர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.

இவர்களில் 1.1 லட்சத்துக்கும் மேற்பட்ட மெக்சிகோ நாட்டவர்கள் என்பதுடன் 59,100 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமை பெற, ஒரு விண்ணப்பதாரர் குடிவரவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தில் (INA) குறிப்பிடப்பட்டுள்ள சில தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராக (LPR) இருக்க வேண்டும்.

மேலும், அமெரிக்காவில் மனைவியுடன் வசிப்பது அல்லது இராணுவ சேவையில் இருப்பது மற்றும் பல பொதுவான நிபந்தனைகள் குடியுரிமை பெறுவதற்கான தகுதிகள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2023 நிதியாண்டில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களில் பெரும்பாலானோர், 5 ஆண்டுகள் சட்டப்பூர்வ வசித்து வந்ததன் மூலம் தகுதி பெற்றவர்கள்.

எது எப்படி இருந்த போதிலும் அமெரிக்க பிரஜைகளை திருமணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு மூன்று வருட காலத்திற்குள் அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.