தேர்தல்கள் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் போராட்டம்: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

World news updates 11.02.2024

தேர்தல்கள் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் போராட்டம்

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று இம்ரான் கான் கட்சியினர் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு தயாராவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க வீரர்கள் மீது டிரான் தாக்குதல் - 3 பேர் உயிரிழப்பு

ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது டிரான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். அதில் இருந்து சிரியா, ஈராக், லெபனான் நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் மீது அமெரிக்கா டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது

பாகிஸ்தான் தேர்தல் முறைக்கேடு - உலக நாடுகள் கவலை

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கவலை வெளியிட்டுள்ளன.