இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன் மரணம்: ரஃபா நகர் மீது தொடரும் விமான தாக்குதல்கள்

OruvanOruvan

Hamas leader Ismail Haniyeh and his son Hashem Haniyeh

காஸாவின் ரஃபா நகரில் இஸ்ரேலிய விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் ஹாமல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மகன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஸா நகரின் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்கள் காரணமாக ஏற்கனவே 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் புதல்வரான 22 வயதான ஹசெம் ஹனியே என்பவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சனிக்கிழமை நடந்த தாக்குதலில் ஹனியேவின் மகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹசெம் ஹனியே கலலூரி மாணவர் எனக்கூறப்படுகிறது.