பைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டுவர மக்காவில் தடை: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

World news updates 10.02.2024

பைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டுவர மக்காவில் தடை

உம்ரா யாத்ரீகர்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை உறுதி செய்யும் நோக்கில் மக்கா பள்ளிவாசல் நிர்வாகம் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மசூதிக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களில் அங்கீகரிக்கப்படாத தண்ணீர் பைகள், பயணப் பைகள் மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் X தளம் முடக்கப்பட்டது

சமீபத்தில் முடிவடைந்த தேசிய தேர்தலை அடுத்து பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு சனிக்கிழமையும் தொடர்ந்த நிலையில், சமூக ஊடக தளமான X நாடு தழுவிய ரீதியில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்கிஸ்தானிய ஊடகங்கள் மற்றும் இணையத்தடுப்பு டிராக்கர் Netblocks இன் பல அறிக்கைகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.

இம்ரான் கானுக்கு 12 வழக்குகளில் பிணை

சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பல்வேறு வழக்குகள் தொடர்பாக பிணை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர் சிறையில் இருக்க வேண்டியுள்ளது.

OruvanOruvan

உக்ரைன் மீது ரஷ்ய நடத்திய தாக்குதல் 7 பேர் பலி

உக்ரைன் தலைநகர் கார்கிவ்வை இலக்கு வைத்து ரஷ்யா நேற்றிரவு நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஒரு குழந்தை,இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிராந்திய ஆளுநர் ஒலே ஸ்னோஹூபோவ் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் நகரில் இந்திய வம்சாவளி நபர் அடித்துக் கொலை

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநகரத்தில் உள்ள ஓர் உணவகத்துக்கு அண்மையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

OruvanOruvan

விமானம் புறப்படும் வேளையில் அவசரகால கதவை திறந்த கனடா பிரஜை கைது

சியாங் மாய் விமான நிலையத்தில் தாய் ஏர்வேஸ் விமானம் புறப்படுவதற்கு முன்னர் அவசரகால வெளியேறும் கதவைத் திறந்த கனடா சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸின் மின்டானோவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் மின்டானோவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புளோரிடாவில் ஜெட் விமானம் விபத்து; இருவர் பலி

அமெரிக்காவின், புளோரிடாவில் தனியார் ஜெட் விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

OruvanOruvan

jet crashes

அமெரிக்காவை பலவீனமாக இந்தியா பார்க்கிறது

'அமெரிக்காவை பலவீனமாக இந்தியா பார்க்கிறது. அமெரிக்கர்கள் வழிநடத்துவார்கள் என நம்பவிலை” என அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளார்களில் ஒருவரான நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.

காணொளியில் பேசியது எப்படி?

பாகிஸ்த்தான் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இம்ரான்கானின் காணொளி ஒன்று எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.