பாகிஸ்தானில் பதற்றம்: எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை ; ஆட்சியமைக்க இம்ரான் கான், நவாஸ் ஷெரீப் தீவிர முயற்சி

OruvanOruvan

பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அதிகமான இடங்களை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர்கள் கைப்பற்றினர்.

இருப்பினும், எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அரசாங்கம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கூட்டணி ஆட்சிக்கு தீவிர முயற்சி

இந்நிலையில், பாகிஸ்தானின் அடுத்த அரசாங்கத்தை அமைக்க இம்ரான் கானின் தஹ்ரிக் இ இசாஃப் கட்சியும் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தீவிரமாக முயன்று வருகின்றன.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஆட்சியமைக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் கடந்த 8ஆம் திகதி அந்நாட்டின் தேசிய அவைக்கும்(நாடாளுமன்றம்), மாகாண அவைகளுக்கும்(சட்டப்பேரவை) தேர்தல் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையில் தாமதம்

அன்றைய தினம் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து, உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடைபெற்றதால் வாக்கு எண்ணும் பணி இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி தேசிய அவையின் மொத்தமுள்ள 266 இடங்களில், இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர்கள் 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம லீக்(நவாஸ்) கட்சி 71 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இருதரப்புக்கு ஏற்பட்டுள்ள இணக்கப்பாடு

முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

OruvanOruvan

நவாஸ் ஷெரீப்பின் அறிவுறுத்தலின் பேரில் முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள் ஆசிப் அலி சர்தாரி, பிலாவல் பூட்டோ ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

பஞ்சாப் மாகாண தற்காலிக முதல்வர் முஷின் நக்வியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பின்போது, கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நவாஸ் ஷெரீப்பின் செய்தியை ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்ததாகவும், அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

மத்தியிலும், பஞ்சாபிலும் கூட்டணி ஆட்சி அமைப்பது என்றும், எந்தெந்த பதிவிகள் யார் யாருக்கு என்பது தொடர்பாக இரு கட்சிகளின் தலைவர்களும் அமர்ந்து பேசி முடிவெடுக்கலாம் என்றும் முடிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

தேர்தலில் வெற்றி பெற்றி பெற்றுவிட்டோம்

இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரையில் தேர்தலில் அவரது ஆதரவு வேட்பாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவுகள் நேற்று இரவுக்குள் வெளியிடப்படவில்லை என்றால் தஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி அமைதி போராட்டம் நடத்தும் என்று கோஹர் அலி கான் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக இம்ரான் கானும் அவரது அரசியல் எதிரி நவாஸ் ஷரிஃபும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவிவரும் பின்புலத்தில் இம்ரான் கானின் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.