பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான்கான் ஆதரவு சுயேட்சை கட்சிகள் தொடர்ந்தும் முன்னிலை: கூட்டாட்சிக்கும் இணக்கம்

OruvanOruvan

Pakistan Election 2024

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான்கான் ஆதரவு சுயேட்சை கட்சிகள் தொடர்ந்தும் முன்னிலை

பாகிஸ்தானில் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வியாழன் மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்த நிலையில், பாகிஸ்தான் பொதுத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, 220 க்கும் மேற்பட்ட தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) ஆதரவு சுயோட்சை கட்சிகள் 92 இடங்களை பிடித்துள்ளது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சி 63 இடங்களையும், பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) 50 இடங்களையும் அதிகபடியாக கைப்பற்றியுள்ளன.

இது தவிர, முட்டாஹிதா குவாமி இயக்கம் 12 இடங்களையும், பிற கட்சிகள் 7 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

மத்திய, பஞ்சாபில் பிபிபி, பிஎம்எல்-என் கூட்டணி ஆட்சி அமைக்க இணக்கம்

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) ஆகியவை மத்தியிலும் பஞ்சாப் மாகாணத்திலும் கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்புக் கொண்டுள்ளன.

பிஎம்எல்-என் தலைவர் ஷேபாஸ் ஷெரீப், பிபிபி தலைவர் பிலாவல் பூட்டோ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி ஆகியோரை சந்தித்து பாகிஸ்தானுக்காக இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்த பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த தகவலை பாகிஸ்தான், ஜியோ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஷேபாஸ் பஞ்சாப் முதல்வர் மொஹ்சின் நக்வியின் இல்லத்தில் பிபிபி உயர்மட்ட தலைவர்களை சந்தித்தார்.

ஷேபாஸ், சர்தாரியுடன் எதிர்கால ஆட்சி அமைப்பது குறித்து விவாதித்ததாகவும், பிஎம்எல்-என் தலைவர் நவாஸ் ஷெரீப்பின் செய்தியையும் தெரிவித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தானில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக பிஎம்எல்-என் தலைமையுடன் கைகோர்க்குமாறு இரண்டு பிபிபி தலைவர்களையும் ஷெஹ்பாஸ் கேட்டுக் கொண்டார்.

பஞ்சாபிலும் மத்தியிலும் ஆட்சி அமைக்க சர்தாரியும் ஷேபாஸும் ஒப்புக்கொண்டதாகவும், அடுத்த கூட்டத்தில் இரு கட்சிகளும் தங்களது சொந்தக் கருத்துக்களை முன்வைத்து, யார் எந்தப் பதவியை ஏற்பார்கள், எங்கு பதவி ஏற்பது என்பது குறித்த அதிகாரப் பகிர்வு தொடர்பான அனைத்து விடயங்களையும் இறுதி செய்யும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

முன்னாள் பிரதமர் மொஹமட் நவாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை அனைத்து அரசியல் கட்சிகளையும் நாட்டை காப்பாற்ற கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

முன்னதாக, மாடல் டவுனில் கட்சி ஆதரவாளர்களிடம் பேசிய நவாஸ் ஷெரீப், தேர்தலில் பிஎம்எல்-என் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக கூறினார்.

தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பாகிஸ்தானில் வாக்குப்பதிவு வியாழன் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

பெரும்பான்மை பெறுவதில் உள்ள சிக்கலினால் வாக்களிப்பின் நேர்மை மற்றும் ஆழ்ந்த அரசியல் பிளவுகள் காரணமாக ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் எழுந்தன.

சர்ச்சைக்குரிய தேர்தல்களைச் சூழவுள்ள அமைதியின்மைக்கு மத்தியில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி பாகிஸ்தான் வியாழக்கிழமை நாடு முழுவதும் கையடக்கத் தொலைபேசிச் சேவைகளை நிறுத்தியது.

இதைத் தொடர்ந்து, பிஎம்எல்-என் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஷேபாஸ் ஷெரீப் லாகூரில் உள்ள தேசிய மற்றும் மாகாண சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவியது.

இருப்பினும் இருவரும் தனித்தனியாக வெற்றியை அறிவித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றம் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும். எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், சட்டசபை தொகுதிகளில் அதிக இடங்களைக் கொண்ட கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.

தேசிய சட்டமன்றத்தில் 265 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது, இதில் ஒரு அரசியல் கட்சிக்கு தனிப்பெரும்பான்மைக்கு 133 இடங்கள் தேவை.

OruvanOruvan

PPP Chairman Bilawal Bhutto (L) and former president Asif Ali Zardari (c)